தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொறியியல் பாடம் மாற்றியமைக்க திட்டம்: அமைச்சர் பொன்முடி பேட்டி

0
147

நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டம் மாற்றி வடிவமைக்கப்பட உள்ளது. அதற்காக 90 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தேசிய கணித மற்றும் அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப பொறியியல் படிப்புக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க குழு அமைத்துள்ளோம். பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க பல்துறை பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், இந்திய ஆட்சி பணி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் என 90 பேர் குழு அமைக்கப்பட உள்ளது. சர்வதேச அளவிலான தொழில் நுட்பம், வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு பிற உயர்கல்வி நிறுவ பாடத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது. தேசிய கல்வி கொள்கைக்கு பதில் மாநில கல்வி கொள்கையை உருவாக்கவும் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மாணவர்கள், உயர்கல்வி படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்