புதுச்சேரியில் முதல் முறையாக நெகிழிக் கழிவு தார்சாலை

0
39

புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் தினமும் சுமார் 25 டன் நெகிழிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் சுற்றுப்புற சூழல் மாசடைவதைத் தடுக்கும் விதமாக அரியாங்குப்பம், கொம்யுன் பஞ்சாயத்தை இணைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அங்கு முதன்முறையாக 200 மீட்டர் தொலைவில் நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சாலைப் பணியானது நிறைவடைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் உறுதித் தன்மையை அறிந்து அதன் மூலமாக புதுச்சேரியின் மற்ற பகுதிகளிலும் இதே போன்று நெகிழிக் குப்பைகளைப் பயன்படுத்தி தார்சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்