“இந்தியா சுய சார்புடன் திகழ்வது முக்கியமானது” – பிரதமர் நரேந்திர மோடி

0
143

தற்போதுள்ள சர்வதேச சூழ்நிலைகள் இந்தியா சுய சார்புடன் திகழ்வதன் அவசியத்தை உணர்த்துவதாக “பிரதமர்” நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அவர், கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார ரீதியில் பல உலக நாடுகள் கடும் சவால்களை சந்தித்து வந்தன. தற்போது அதற்கு சற்றும் சலிக்காமல் உக்ரைன் ரஷ்யா போரினால் பல உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றன. இது மேலும் சில சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள உலக சூழ்நிலையில் எந்த நிகழ்வும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் எனவும் அது இந்தியாவைப் பாதிக்கும் பொருட்டு அவற்றை துணிச்சலுடன் எதிர் கொள்வதற்கு நமது நாடு சுய சார்புடன் இருப்பது அவசியமானது எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் இது போன்ற பல காரணங்களுக்காக அன்னிய தயாரிப்பு பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வதில் உள்ள நடைமுறை சிக்கல்களைப் போக்க, இந்தியத் தயாரிப்புப் பொருட்களை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் எனவும் “பிரதமர்” நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்