ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி..

0
171

ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையின் கீழ் பேசிய “பிரதமர் நரேந்திரமோடி” காங்கிரஸ் முன்னாள் தலைவர் “ராகுல் காந்தி”யின் பேச்சுக்கு எதிராக சில கருத்துகளைப் பதிவு செய்தார். வாரிசு அரசியலில் இத்தனை ஆண்டுகாலம் கட்சி நடத்தும் காங்கிரஸால் தனிநபரின் திறமை புறக்கணிக்கப்படுகிறது என்றும் காங்கிரஸ் கட்சி இல்லாவிட்டால் வாரிசு அரசியலே இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி இல்லை எனில் ஊழலும் இருந்திருக்காது எமர்ஜென்சியும் இருந்திருக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக அரசாங்கங்களை காங்கிரஸ் கட்சி எமர்ஜென்சியைக் கொண்டு வந்து டிஸ்மிஸ் செய்ததையும் அவர் குறிப்பிட்டார். மாநில உரிமைப் பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் பல மாநில முதல்வர்களை பதவியில் இருந்து நீக்கியிருக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். தான் குஜராத் முதல்வராக இருந்தபோதும் கூட எனக்கும் பல்வேறு நெருக்கடிகளைக் காங்கிரஸ் கொடுத்துள்ளது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். இதனையடுத்து அவையில் இருந்த காங்கிரஸ் கட்சி ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தது . குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரையில் பேசும் நரேந்திரமோடி காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்