“எதற்கும் துணிந்தவன்” படத்தைத் திரையிடக் கூடாது – “பாமகவினர்”..!

0
153

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதற்கிடையே நடிகர் சூர்யா வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக இத்திரைப்படத்தைத் திரையிடக் கூடாது என திரையரங்கு உரிமையாளர்களுக்கு அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சூர்யா நடித்து வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டதாகக் கூறி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாகவும் ,வன்னியர் சங்கத்தின் சார்பாகவும் அத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

Suriya's strong reply to PMK leader Anbumani Ramadoss - Tamil News -  IndiaGlitz.com
file pic

பாட்டாளி மக்கள் கட்சியினர் நடிகர் சூரியா வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர். அதனால் ஏற்கனவே நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தற்போது ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் நடித்த எந்த படத்தையும் திரையிடக்கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் திரையரங்க உரிமையாளர்களிடம் அறிக்கை கொடுத்துள்ளனர். இதனால் நடிகர் சூர்யா வீட்டிற்கு மேலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்