காவல்நிலைய காட்சிப்பதிவுகளை 18 மாதங்கள்பாதுகாக்க வேண்டும் -உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

0
292

தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி பதிவு காட்சிகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். என்று தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை காவல் ஆய்வாளர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில்

வடமதுரை காவல் ஆய்வாளர் கருப்பசாமி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராஜ கணேஷ் மற்றும் தங்கபாண்டி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மதுரையை சேர்ந்த பாலகுருசாமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மதுரை கிளை நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள் பாதுகாக்கப்படுவது உள்துறைச் செயலரும் டிஜிபியும் உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Sylendra Babu is new Tamil Nadu DGP | The News Minute

மேலும் சிசிடிவி காட்சி பதிவுகளை பாதுகாக்க சுணக்கம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது டிஜிபி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை டிஜிபி உறுதிப்படுத்த வேண்டும் என்று நீதிபதி கேட்டுக்கொண்டார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்