பேய்கனவு பெண்ணிடம் நகைபறிப்பு , போலி மந்திரவாதிக்கு வலை

0
107


கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் இவரது மனைவி விஜயஸ்ரீ விஜய் சறுக்க அடிக்கடி பேய் கனவு வருவதாகவும் அதனால் தூக்கம் வருவதாகவும் தனது கணவரிடம் தெரிவித்தார் இந்நிலையில் பாண்டியன் வெளியே சென்றிருந்த நேரம் அவரது வீட்டிற்கு ஒரு சாமியார் வந்தார் அவர் விஜய் ஸ்ரீராம் உங்களுக்கு அடிக்கடி தூக்கத்தில் பேய் கனவு வருவதும் எனக்கு தெரியும் என்று கூறி அவர் பேயை விரட்டுவதாக கூறி சில மந்திரங்கள் கூறி அவற்றை விரட்டுகிறேன் என்று சொல்ல விஜய் ஸ்ரியோ நீங்கள் யார் என்று தெரியாது வேண்டாம் என்று மறுத்துள்ளார் அதற்கு உங்கள் கணவர்தான் என்னை அனுப்பினார் உங்களுக்கு பேய் கனவு வருவது எனக்கு எப்படி தெரியும் என்று அவரிடம் நயமாகப் பேசி விஜய் ஸ்ரீயை நம்ப வைத்து பின் அவர் சுதாரிப்பதற்குள் நேரத்தை வீணடிக்காதீர்கள் உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து வாருங்கள் என்று சொல்ல அதை நம்பிய விஜயஸ்ரீ சரிஎன்று உள்ளே சென்று ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்துள்ளார்.

உடனே அந்த தண்ணீர் சொம்பை வாங்கிய போலிமந்திரவாதி மந்திரத்தை ஏதோ சொல்வதுபோல் முனுமுனுத்துக் கொண்டே அந்த தண்ணீரை கையில் ஊற்றி வேகமாக விஜயஸ்ரீ முகத்தில் தெளித்து உள்ளார். பின் உங்கள் கழுத்தில் இருக்கும் தாலி செயினை கழட்டி இந்த செம்பில் போடுங்கள் என்று விஜய்யிடம் கூறியுள்ளார் அதற்கு விஜயஸ்ரீ மறுக்கவே நீங்கள் இவற்றை போட்டால் தான் உங்களிடம் இருக்கும் அந்த துஷ்ட சக்திகளை இந்த செம்பிற்குள் வந்துவிடும் நான் அவற்றை கட்டி விடுவேன் என்று நம்பும்படி கூறியுள்ளார். உடனே தனது கழுத்தில் இருந்த ஆறு பவுன் தங்க தாலி செயினை கழற்றி செம்பில் போட்டார் விஜயஸ்ரீ. போலி மந்திரவாதி அதோடு நிற்காமல் உங்கள் காதில் இருக்கும் கம்மல்கள் இரண்டையும் கழட்டி இந்த செம்பிற்குள் போடுங்கள் என்று கூறியுள்ளார், அதற்கு விஜயஸ்ரீ சற்று யோசிக்கவே சீக்கிரம் போடுங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கூறி அந்த கம்மல்களை செம்பிற்குள் போட வைத்துள்ளார் அந்த போலி மந்திரவாதி.

பின்பு விஜயஸ்ரீயை நீங்கள் வீட்டுக்குள் சென்று உங்கள் முகத்தை கழுவிக் கொண்டு கை, கால்களை கழுவி விட்டு வாருங்கள், என்று சொல்லி இருக்கிறார். உடனே உள்ளே சென்ற விஜயஸ்ரீ சற்று சந்தேகத்தோடு திரும்பி பார்த்துள்ளார், அதிர்ச்சி அடைந்தார் விஜயஸ்ரீ திரும்பி பார்த்த இடத்தில் மந்திரவாதியும் இல்லை , செம்பும் இல்லை தலைமறைவானார் அந்த போலி மந்திரவாதி. ஓடி வந்து வெளியே பார்த்தார் விஜயஸ்ரீ தெருவில் எங்குமே மந்திரவாதியை காணவில்லை. அக்கம் பக்கம் ஓடி பார்த்து எங்கும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த விஜயஸ்ரீ நெல்லிக்குப்பம் காவல் நிலையத்திற்குச் சென்று நடந்தவற்றைக் கூறி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போலி மந்திரவாதியை தேடி வருகின்றார்கள்.

பெ.சூரியா , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்