அதிபர் மாளிகை முற்றுகை – “கலவர பூமியானது இலங்கை”

0
156

கடும் பொருளாதார வீழ்ச்சியில் திணறி வரும் இலங்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் அதிபர் மாளிகை முன்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தலைநகர் கொழும்புவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொருளாதார வீழ்ச்சியைக் கண்டித்து அந்நாட்டு அதிபர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திடீரென போராட்டக்காரர்கள் காவல்துறையினர் வாகனங்களைத் தீவைத்து கொளுத்தினர். மேலும் போலீசாரை நோக்கி கற்களை எறிந்தும் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளையும்,ரப்பர் குண்டுகளையும் வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.

இந்த தாக்குதலில் பத்திரிகைக்காரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கொழும்புவில் பல்வேறு பகுதிகளில் ஊரடங்குக் கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதனால் கொழும்பு நகரமே கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்