மிக உயர்ந்த துபாய் புர்ஜ் கலிபா வில் ஒளிபரப்பப்பட்ட தமிழின் பெருமைகள் !

0
360

“துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிபா கட்டடத்தில் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக நேற்று காணொலி ஒன்று ஒளிபரப்பப்பட்டது”.தமிழகத்திற்கு சர்வதேச முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக துபாய் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

துபாயில் உள்ள தமிழ்நாடு அரங்கினைத் திறந்து வைத்த அவர் பின்னர் புர்ஜ் கலிபா கட்டடத்தில் ஒளிப் பரப்பப்பட்ட அக் காட்சியைப் பார்வையிட்டார். 2,217 அடி உயரம் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய கட்டடமாக விளங்கும் புர்ஜ் கலிபா கட்டடத்தில் தமிழ்நாட்டின் வரலாறு, தமிழர்களின் பண்பாடு, தமிழ் மொழியின் தொன்மை வாய்ந்த சிறப்புகள் மற்றும் தமிழக அகழ்வாராய்ச்சிகள் குறித்த ஆவணக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

First time in history burjkhalifa light up with Tamil song || உலகின்  மிகவும் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த 'தமிழ்'

கட்டடம் முழுவதும் ஒளிபரப்பப்பட்ட இந்தக் காட்சியை அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்