பிவி சிந்துக்கு பிரதமர், முதலமைச்சர் பாராட்டு

0
331

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை பிவி.சிந்துவை பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் “2022 ஸ்விஸ் ஓபன் தொடரை வென்ற பிவி.சிந்துக்கு வாழ்த்துக்கள் எனவும், அவரது சாதனைகள் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கிறது” எனவும் பாராட்டியுள்ளார்.பிவி.சிந்துவின் எதிர்கால முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அதுபோல தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் பிவி.சிந்து வைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். “சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று, தனது திறமையை வெளிப்படுத்தி இந்த சீசனின் இரண்டாவது ஒற்றையர் பட்டத்தை வென்று நம் அனைவரையும் பிவி. சிந்து பெருமைப்படுத்தியுள்ளார் என்றும், அவர் மேலும் பல வெற்றிகளைப் பெற்று நம் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்க வாழ்த்துகிறேன்” என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்