வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

0
176

இமாசலபிரதேசம் உனா மாவட்டம் தஹ்லிவால் தொழில்துறை பகுதியின் பத்ரி கிராமம் அருகில் உள்ள குர்பாலாவில் பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இங்கு பட்டாசுகளை பெட்டியில் வைத்து பேக் செய்யும் பணியில் ஏராளமான தொழிலாளரகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறின.

அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன் இழப்பீடும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இமாசலபிரதேசத்தில் நடந்த தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்

வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வாழ்த்துக்கள், என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்