கடத்திச் செல்லப்பட்ட தொன்மையான சிலைகள் – “பிரதமர்” மோடி ஆய்வு

0
138

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தி செல்லப்பட்ட தொன்மைவாய்ந்த சிலைகள் மற்றும் பழமை வாய்ந்த பொருள்கள் ஆகிவற்றை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் இந்திய தொல்லியல் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அதன்படி இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு அமெரிக்காவில் ஏலம் விடப்பட்ட சாமி சிலைகள் உட்பட பல்வேறு தொன்மையான பொருட்களை இந்தியத் தொல்லியல் துறையினர் மீட்டுள்ளனர். அவ்வாறு இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட பழங்கால சுவாமி சிலைகள் உள்ளிட்ட 29 பழம் பொருட்கள் இந்தியா கொண்டுவரப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி அவற்றை ஆய்வு செய்தார்.

இந்தியாவிலிருந்து பல்வேறு காலகட்டங்களில் கடத்திச் செல்லப்பட்ட பழம் பொருள்களை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி, காணொலி காட்சி வாயிலாக ஆஸ்திரேலிய பிரதமரிடம் இந்தியாவிற்குச் சொந்தமான தொன்மையான பொருள்களை இந்தியாவிடமே ஒப்படைத்ததற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்