பாஜக, குடும்ப அரசியலுக்கு எதிரானது – “பிரதமர் மோடி”

0
135

பாரதிய ஜனதா கட்சியில் குடும்ப அரசியல் ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டாது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் “ஜேபி நட்டா” மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு அக்கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் ஜேபி. நட்டா ஆகியோருக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூறினர் .நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என கட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

Amit Shah's big shoes to fill: Will Nadda run BJP on his own terms? |  Business Standard News
narendra modi ,jp nadda and amithsha

அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “பாரதிய ஜனதா கட்சியில் குடும்ப அரசியலலை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ” அதே நேரத்தில் பிற கட்சிகளிலும் குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது எனவும், அதற்கு எதிராக நாம் போராட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேலும் என்னால்தான் பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் அதற்கான காரணம், பாரதிய ஜனதா கட்சி வம்சாவழி குடும்ப அரசியலுக்கு எதிராக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்