சொத்து வரி உயர்வு – எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம்

0
276

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி கே.பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில்,ஏற்கனவே பொங்கல் சிறப்புத் தொகையைத் தராமல் திமுக அரசு கைவிரித்த நிலையில் 150% வரை சொத்து வரியை ஆளும் அரசு அதிகரித்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சியில் ஆளுங்கட்சிக்கு வாய்ப்பளித்த மக்களுக்கு சிறப்புப் பரிசாக வந்திருக்கும் இந்த சொத்து வரி உயர்வு வெரும் டிரெய்லர் தான் என்றும், இனி வரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்