டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட ராபியா சைஃபிக்கு நீதி ‌கேட்டு நெல்லையில் போராட்டம்

0
201

டெல்லியில் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட காவல் அதிகாரி ராபியா சைபி படுகொலைக்கு நீதி கேட்டு மனித உரிமைகள் காப்பாளர்கள் கூட்டமைப்பு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் அனைத்து அரசியல் கட்சிகள் மக்கள் அமைப்புகள் இணைந்து நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே நேற்று நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆர்ப்பாட்டத்தில் தமுமுக,மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமுமுக மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீனத் சராபியா ஆலிமா கண்டன உரையாற்றினார். தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை ‌மாநில தலைவர் ‌காஜா‌மொய்னுதீன் உரையாற்றினார்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கண்டன உரையாற்றினர்.

தமுமுக மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன், மமக மாவட்ட துணை செயலாளர் காஜா, பகுதி,‌ கிளை நிர்வாகிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி,மனித உரிமை அமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.மேலும் நீதி கிடைக்கும்வரை ஓயப்போவதில்லையென அழுத்தமாக கூறினர்.

பணிக்கு சேர்ந்த நான்கு மாதங்களே ஆன அந்த பெண் காவல் அதிகாரி, ஒரு கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மேலும் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் உடலில் குறைந்தபட்சம் உடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கத்தி குத்துகள் உள்ளன. உடல் கிழிக்கப்பட்டுள்ளது. மார்பகங்கள் வெட்டப்பட்டுள்ளன. பெண்ணுறுப்பு மிக மோசமான நிலையில் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்தச்செய்தி வெளியுலகிற்கு தெரிந்த பிறகு, ஒருவர் தன்னை ராபியா சைஃபியின் கணவர் என்றும், தான் தான் அவரை கொன்றதாகவும் காவல்துறையிடம் சரணடைந்துள்ளார்.

ஆனால் ராபியா சைஃபிக்கு உண்மையிலேயே திருமணம் நடைபெறவில்லை என்றும், இதன் பின்னால் மிகப்பெரிய சதி உள்ளதென்றும் அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். காவல்துறை இந்த வழக்கில் முக்கியத்துவம் செலுத்தாதது ஏன்? 

எனவே தெளிவான கோணத்துடன் காவல்துறை நன்கு ஆராய்ந்து வழக்கில் உண்மையான குற்றவாளியை கண்டறிய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்