பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக போராட்டக்காரர்கள் அரசுக்கு எச்சரிக்கை !

0
40

புதிய விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் பகுதியில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு செய்ய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4 ஆயிரத்து 700 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கிறது.இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்துக்கு உட்பட்ட சார்பதிவாளர்களுக்கு பத்திரப் பதிவுத்துறை தலைவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் பரந்தூர் விமான நிலையத்திற்கு நில எடுப்புப் பணி தொடங்க உள்ளதால் அந்தப் பகுதியில் நிலங்களை வைத்து உள்ளவர்கள் இனி பத்திரப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்றைப் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற்றவர்களின் பத்திரப்பதிவை மட்டுமே ஏற்க வேண்டும் என்றும் சார்பதிவாளர்களுக்கு பத்திர பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரப் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பரந்தூரில் பத்திரப்பதிவு குறித்த வருவாய் துறையினரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்