பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கிறது “ஆம் ஆத்மி”.!

0
158

உத்தர பிரதேசம் ,உத்தரகாண்ட், மணிப்பூர் ,கோவா ,பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப்பைத் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பாரதீய ஜனதா கட்சி முன்னிலையில் உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே தற்போது முன்னிலையில் உள்ளது. மொத்தம் 117 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்க பெரும்பாண்மையாக 59 சட்டமன்ற தொகுதிகள் தேவைப்படும் நிலையில் ஆம் ஆத்மி கட்சி 89 தொகுதிகளுக்கும் மேல் அங்கு முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடிக்க உள்ள நிலையில் அக்கட்சியின் தொண்டர்கள் ஆம் ஆத்மியின் சின்னமான துடைப்பத்தை கையில் பிடித்துக்கொண்டு டெல்லியில் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும்,சிரோமணி அகாலி தளம் 7 இடங்களிலும்,பாஜக 5 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ், நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்