டெல்லியில் விவசாயிகள் போராட்ட நாயகன் மற்றும் திரைப்பட நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் மரணம்

0
131

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகர் தீப் சித்து சாலை விபத்தில் உயிரிழந்தார். அரியானா மாநிலம் சோனிபட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உயிரிழந்தார்.

குண்டலி மனுஷர் பல்வால் விரைவுச் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீது விரைந்து சென்ற இவர் கார் மோதியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த அவர் கார்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடைபெற்றது. அப்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையை முற்றுகையிட்ட நிலையில் அங்கு சீக்கிய மதக்கொடி இயற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் விவசாயிகளை தூண்டிவிட்டதாக பஞ்சாபி நடிகை தீப்தி இருமுறை கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பகுதியை பூர்வீகமாகக் கொண்ட 35 வயதான தீப் சிங் சிந்து ஆறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர் விவசாயிகள் போராட்டத்தின் தொடக்கம் முதலே அதிக ஈடுபாடு காட்டி வந்தார். தீப் சித்து மறைவுக்கு முதலமைச்சர் சரன்ஜித் சிங் சன்னி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பெ . சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்