இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர புதினும், மோடியும் ஒப்புக்கொண்டனர் -பிரதமர் அலுவலகம்

0
210

உக்ரைன் தலைநகர் கீவ் கிழக்கு துறைமுக நகரான மாரியூப்போல் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது.

இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தொடர புதினம் மோடியும் ஒப்புக்கொண்டனர் -பிரதமர் அலுவலகம்

உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை,

உக்ரைன் எல்லையில் இரு நாடு களுடன் வெளியுறவு அமைச்சர் ஏற்கனவே பேச்சுவார்த்தை,

கீவ் நகரை நோக்கி முன்னேறுகிறது ரஷ்ய படை.

முப்படைத் தாக்குதலை அடுத்து தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டின் பாராளுமன்றம், கல்வித் துறை, வங்கி, உள்ளிட்ட முக்கிய இணையதளங்களை ஹேக் செய்து அத்தனை தகவல்களையும் அழித்துவிட்டது ரஷ்ய பிரிவு.

முப்படை தாக்குதலையடுத்து தரைப்படை வழியாக தொடர்ச்சியாக கீவ்பகுதியில் நகருக்குள் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்கின்றது. அங்கு வசிக்கக்கூடிய மக்கள் சுரங்கத்தின் உள்பகுதியிலும், மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர் .மேலும் பல மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள தங்கள் துணிகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளோடு நடைபயணமாக சாலை மார்க்கமாக வேறு பகுதிகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

சாலை மார்க்கமாக கீவ் நகருக்குள் ரஷ்யப் படை முன்னேறி வருவதால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கூட்டம் கூட்டமாக சரணடைந்து வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் மக்களுக்கு அந்நாட்டு அரசு 10,000 துப்பாக்கிகள் வழங்க முடிவு செய்துள்ளது.

நேற்று காலை ஆரம்பித்த தாக்குதலை தொடர்ந்து இரண்டாவது நாளாக கீவ் நகரில், இன்று காலை தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததால் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. 50 ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே நேற்றைய உக்ரேனின் தாக்குதலில் 5 ரஷ்ய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் அறிவித்த நிலையில், இன்று மேலும் 2 ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தகவலை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது. எங்களுடைய போர் விமானங்கள் பாதுகாப்பாக திரும்பிவிட்டன, எந்த போர் விமானத்தை உக்ரைன் ராணுவம் சுட்டு வீழ்த்த வில்லை என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 137 பேர் பலி.

ரஷ்யா முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்து விட்டதாகவும் 316 பேர் காயமடைந்து விட்டதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா தொடுத்துள்ள இந்த போரை தனித்து நின்று உக்ரைன் அரசு எதிர்கொள்கிறது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோவில் இணைக்கும்படி 27 ஐரோப்பிய தலைவரிடம் கோரிக்கை விடுத்தும் யாரும் பதில் அளிக்கவில்லை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெ. சூரிய , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்