ரஷ்யாவை மிரட்டுபவர்கள் வரலாறு காணாத அளவுக்கு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை.

0
430

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்று ரஷ்ய அதிபர் புடின் அறிவித்திருப்பது பல உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யாவின் ராணுவத்திற்கு உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அதிபர் புதின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ரஷ்யாவை மிரட்டுபவர்கள் வரலாறு காணாத அளவுக்கு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்ற புதிர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ஜி-7 நாடுகளின் அவசர கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

நேட்டோ கூட்டணி நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் உடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்யபடைகள் தொடர்ந்து தாங்குதல் நடத்தி வருகிறது.

பெ.சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்