தென்னகத்தை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம் -ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு

0
115

கடையம், பாவூர்சத்திரத்தில் நிற்காத ரயிலை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் நடத்த பஞ்சாயத்து, அரசியல் கட்சிகள் வியாபாரிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளது.

திருநெல்வேலி பாலக்காடு பாலருவி ரயில் கொரோனா காலத்துக்கு முன்பு ஓடியது. அப்போது கடையம் பாவூர்சத்திரம் செங்கோட்டை ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று சென்றது. தற்போது இந்த ரயில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்கிறது. இதுகுறித்து பல்வேறு கடிதங்களை பல்வேறு அமைப்புகள் மூலமாக ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி வருகின்றனர். திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் , தென்காசி எம்பி தனுஷ் எம் குமார், திருநெல்வேலி தென்காசி மாவட்ட எம்எல்ஏக்கள் அதிகாரிகளுக்கு முறைப்படி மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

திட்டமிட்டே திருநெல்வேலி தென்காசி மாவட்டங்களில் உள்ள இந்த மூன்று ரயில்நிலையங்களையும் ரயில்வே நிர்வாகம் புறக்கணிக்கிறது.
மிகப்பெரிய ரயில் நிலையங்களாக இந்த நிலையங்கள் இருந்தும் கூட திட்டமிட்டே இந்த ரயில்நிலையங்களை புறக்கணித்து வருகின்றனர்.

ரயில்வேயில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்கள் ஊரில் மட்டும் ரயிலை நின்று செல்ல நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தொடர் கோரிக்கை வைத்தும் முன்பு இதே ரயில் நின்று சென்ற கடையம் பாவூர்சத்திரம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிற்கவிடாமல் தடுத்து விட்டனர்.

இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாவூர்சத்திரம் கடையம் செங்கோட்டை தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் பொதுமக்களை திரட்டி பஞ்சாயத்து தலைவர்கள் திருநெல்வேலி பாலக்காடு ரயிலை மறியல் செய்துவது என முடிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து கேரளாவுக்கு முககியத்துவம் கொடுத்துவிட்டு தமிழகத்தினை ஓரங்கட்டும் ரயில்வே நிர்வாகத்தினை கண்டித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் இப்பகுதி மககள் தயாராகி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்