ஓடும் ரயிலில் பயணிகள் ஏறக்கூடாது என இரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

0
189

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியிலுள்ள வசாய் ரோடு இரயில்வே ஸ்டேசனில் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போ இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று முதியோர்கள் ரயிலை பிடிக்க ஓடி வந்தார்கள்.

அப்போ ரயில் நகர்ந்துக்கொண்டிருந்தது அதை பொருட்படுத்தாது ரயிலில் ஏற முயன்ற பெண் ஒருவர், கால் தடுமாறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொண்டார்.

உடனே உடன்சென்ற ஒருவர் அவரை வெளியே இழுக்க போராடியபோது அவர் மீது அடுத்தடுத்து ரயில் பெட்டிகள் அவர் மீது இடித்தது.

எனினும் நல்வாய்ப்பாக அவர் நடைமேடையில் இருந்து கிழே விழவில்லை இதைப் பார்த்து சுதாரித்துக்கொண்ட சக பயணிகள், அப்பெண்ணை மீட்டனர்.

அதே சமயம் அந்த ரயில் உடனே நிறுத்தப்பட்டதால் வேகமும் குறைந்தது.

இதில் அப்பெண் சில காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரயில் புறப்பட்டபின் ஏறவோ, இறங்கவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள அதிகாரிகள், விதிகளை மீறுவதே விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான காட்சிகள் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதை இங்கே காணலாம்.

நன்றி- ANI.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்