பணகுடியில் இரயில்வே இரும்பு திருடு போனது

0
156

பணகுடி அருகே காவல்கிணற்றில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக வைக்கப்பட்டு இருந்த 25 டன் இரும்புகள் திருட்டு – பணகுடி போலிசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே காவல் கிணற்றில் இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த 25 டன் இரும்பு கம்பிகள் திருடு போயுள்ளன. நெல்லை முதல் – நாகர்கோவில் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் காவல்கிணறு இடையே இரட்டை இரயில்பாதை அமைக்கும் பணிகளுக்காக காவல்கிணறு ரெயில் நிலையம் அருகே இரும்பு கம்பிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது . இதில் 25 டன் இரும்பு கம்பிகள் திருட்டு போனதாக ரெயில்வே ஒப்பந்த மேற்பார்வையாளர் கண்ணன் , பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார் . பணகுடி போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்