தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழை ! சென்னை வானிலை மையம் மிக முக்கிய அறிவிப்பு.!

0
84

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்,நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், வெப்பநிலை குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரளா – கர்நாடக கடலோரப்பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 12-ம் தேதி வரை, மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்