தமிழகத்தில் மழை நீடிக்கும்

0
369

இன்று முதல் அடுத்த ஒரு வாரம் தமிழகத்தில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கன, மிக கனமழைக்கும் ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கும் வாய்ப்பு.

இலங்கை அருகே நிலவி வரும் காற்று சுழற்சி தீவிரமடைந்து குறைந்த காற்றழுத்தமாக வலுவடைந்து அடுத்த 4, 5 நாட்கள் இலங்கை, தமிழகம் மற்றும் அரபிக்கடல் ஒட்டி நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால் இன்று முதல் ஒரு வாரம் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கன, மிக, அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

தென் உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், மேற்கு உள் மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் மற்றும் மத்திய உள் மாவட்டங்களில் பரவலான மழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கன, மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.

எதிர்ப்பார்த்தது போல் தென் கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி வருகிறது.
உள் மாவட்டங்களிலும் பல பகுதிகளாக மழை பெய்ய துவங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதல் கன, மிக, அதி கனமழை பதிவாகி வருகிறது.
காலை முதல் தற்போது வரையான மழை அளவுகளில் திருசெந்தூர் 173.5மி.மீ, தூத்துக்குடி 123.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையால் பல பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்