ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடிகணக்கான மதிப்புமிக்க நகைளை அபேஸ்செய்த கோயில் ஊழியர்கள்

0
214

ராமநாதபுரம்: வைரம், வைடூரியம், பவளம் மற்றும் மரகதம் உள்ளிட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட பெரிய நகையை, கோயில் ஊழியர்கள் ஆனையருக்கு தெரியாமல் திருட முயற்சித்த சம்பவம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல புனிதத் தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது. இத்தலங்களில் வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் தங்களால் முடிந்தவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். செல்வந்தர்களும் தங்களால் முயன்ற காணிக்கைளாக தங்க வைர வைடூரியங்கள் கொண்ட நகைகளை வழங்குவது வழக்கம்.

இப்படி காணிக்கையாக வழங்கப்பெறும் நகைகள் பாதுகாப்பாக இருக்கின்றதா? என்பதே அனைவரது கேள்வியாக இருந்துவருகிறது. அதற்கு ஏற்றார் போல், பல இடங்களில் கோயில் நகைகள் திருடப்பட்டு வருவதும் அதை அதிகாரிகள் மீட்கப்பட்டுவருதும் செய்திகளாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், புகழ்பெற்ற கோயிலான ராமநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும், பல ஊர்களிலிருந்து பல செல்வந்தர்களும் இக்கோயிலுக்கு பக்தர்களாக வருகின்றனர்.

கோயில் ஊழியர்கள் ஆனையருக்கு தெரியாமல் திருட முயற்சித்த சம்பவம், ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பல புனிதத் தலங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது. இத்தலங்களில் வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் தங்களால் முடிந்தவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். செல்வந்தர்களும் தங்களால் முயன்ற காணிக்கைளாக தங்க வைர வைடூரியங்கள் கொண்ட நகைகளை வழங்குவது வழக்கம். அதற்கு ஏற்றார் போல், பல இடங்களில் கோயில் நகைகள் திருடப்பட்டு வருவதும் அதை அதிகாரிகள் மீட்கப்பட்டுவதும் செய்திகளாக இருந்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், புகழ்பெற்ற கோயிலான ராமநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற தலமாகும், பல ஊர்களிலிருந்து பல செல்வந்தர்களும் இக்கோயிலுக்கு பக்தர்களாக வருகின்றனர். அந்த பக்தர்கள் கோயிலுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். அதன் வரிசையில், மார்ட்டின் என்ற தொழிலதிபர் ராமநாத சுவாமி கோயிலுக்கு ரூபாய் முப்பத்தி ஆறு லட்சம் மதிப்பிலான ருத்ராட்ச மாலையை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அக் காணிக்கையை கோயில் ஊழியர்கள் கோயில் ஆணையரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில் வழக்கறிஞர் ஒருவர், மாவட்ட கலெக்டரிடம் “ராமநாத சுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கோவில் ஊழியர்கள் கையாடல் செய்து விட்டனர்” என்று புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் “தொழில் அதிபர் மார்ட்டின், ருத்ராட்ச மாலை மட்டுமில்லாமல், பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க வைர வைடூரியங்கள் பதித்த ஆபரண தங்க நகையயும் பரிசாக அளித்தார். அவர் வழங்கிய தங்க நகையை கோயில் ஆணையரிடம் வழங்காமல் கோயில் ஊழியர்கள் கையாடல் செய்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது”. இச்சம்பவம் ராமநாதபுர மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..இச்சம்பவம் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்