தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சியில் நாளை மறுவாக்குப்பதிவு

0
177

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவசைலம் ஊராட்சியில் 2வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 3வது வார்டு கவுன்சிலர் தேர்தல் நடந்தநிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் கவனக்குறைவால் 3வது வார்டு வேட்பாளர்களுக்கு 2வது வாக்காளர்கள் 45 பேர் வாக்களித்ததால் நாளை 9.10.2021 மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்தநிலை ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலை கேலிக்கூத்தாக்கிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்