தென் மாவட்டத்திற்கு சிகப்புவண்ண எச்சரிக்கை

0
206

நீர் நிலைகளின் அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட மக்கள் இன்று இரவு நேரத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். நீர்நிலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள மக்கள் கவனமாக இருக்கவும். உள்ளூர் இளைஞர்கள் தங்களை பாதுகாத்து கொண்டு சற்று பிற இடங்களில் கவனம் செலுத்தி தாழ்வான இடங்களிலும், நீர் நிலைகளில் உள்ள மக்களையும், குழந்தைகளையும் சற்று பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்துங்கள்.

முன்னர் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில் மேகத்தின் போக்கை பொருத்து வானிலை தகவல் மாற்றமடைந்து அதன்பின் சிகப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது,ஆகவே தூத்துக்குடி, திருச்செந்தூர், தென்காசி, கன்னியாகுமரி ,திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்