Sunday, October 24, 2021

பா.ஜ.க மகளிரணி சார்பில் மதநல்லிணக்க அறிக்கை வெளியீடு.

இன்று பா.ஜ.க மகளிரணி சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது……..

வர வர மத
வெறி வளர்கிறது..

மத ஒற்றுமையை
நிலை நாட்டுவோம்…

அனைவரும்
“அணைந்த” பின்….

ஒன்றும் கொண்டு போவதில்லை

வாழும் காலத்தில்
வாழ்த்திச்
செல்வோம்

உடன் வசிப்போரின்
வாழ்த்தைப்
பெறுவோம்…

உன்னதமாக
உள்ளன்போடு
பழகுவோம்…

எம்மதமும் நம் மதமே என்ற தாரக மந்திரத்தைக்
கடைபிடிப்போம்…

எல்லாப் பண்டிகைகளையும் …நம்

பண்டிகைகளாகக் கருதி
இயல்பாகக்
கொண்டாடுவோம்…

மதப் பிரச்சனையை
மறந்து விடுவோம்

மனித நேயம் காத்திடுவோம்.

வருங்காலம்
வசந்தமாகட்டும்…

வாரிசுகளின்
வாழ்வில் ஒளி
வீசட்டும்.

எல்லா இறைவனுமே
நமக்காக….

என்ற எண்ணம்
தோன்றினால்
வண்ண மயமாகும்..

நம்
வாழ்க்கை .

தென் பொதிகைச்
சாரல்…

இரவும் பகலும்
வீசுவதுக் கண்டு…

இன்பமடைகிறார்கள்….

தென் பொதிகை மக்கள் .

   நன்றி.

திருமதி பிரேமா

மகளிரணி சார்பாக.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
2,994பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,700சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles