திருப்பதி இலவச தரிசன டோக்கன் ஆன்-லைனில் வெளியீடு

0
146

திருப்பதி:காலை 9 மணிக்கு இலவச தரிசனம் டோக்கன்கள் ஆன்-லைனில் வெளியிடப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான இலவச தரிசன டோக்கன்கள் இன்று 27ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்-லைனில் வெளியிடப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும்.
எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இலவச தரிசன டோக்கன்கள் தேவையான பக்தர்கள் இன்று காலை 9 மணி முதல் தேவஸ்தான வெப்சைட்டில் முன்பதிவு செய்து பெற்று கொள்ளலாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்