ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு

0
65

வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றியமைத்து வருகிறது. இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடித்து வந்தது.

இந்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தில் 4.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின் மூலம் வீடு, தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.உக்ரைன் – ரஷியா போர் விளைவாக ஏற்பட்ட பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்காக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்