நெல்லையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மத்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம்.

0
274

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் ‘பஞ்சப்படியாக நிலுவையில் உள்ள ரூபாய் 1600 கோடியை’ உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் எனக்கோரி திருநெல்வேலி கேடிசி நகரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களாக பெண்கள் உட்பட மொத்தம் 86 ஆயிரம் பேர் இருப்பதாகவும்,தங்களுக்கு 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சப்படியாக 119% மட்டுமே இன்றுவரை வழங்கப்பட்டு வருவதாகவும் 2018ஆம் ஆண்டுக்குப் பின் ஓய்வு பெற்றவர்களுக்கு 5% மட்டுமே பஞ்சப்படி வழங்கப்பட்டு வருவதாகவும்,கடந்த 76 மாதகாலமாக பஞ்சப்படி என்பது தங்களுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ பணிகளை வழங்கவேண்டும் என்றும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக 7850 ரூபாயை அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மத்திய போக்குவரத்துக்கழக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு REWA மாநில குழு உறுப்பினர் எஸ்.சிவதாணுதாஸ் தலைமை தாங்கினார். CITU மாவட்ட செயலாளரான ஆர். மோகன் துவங்கி வைத்தார். REWA மாநில உதவித் தலைவர்கள் பி.முத்துகிருஷ்ணன், பி.வெங்கடாச்சலம் மற்றும் மாநிலச் செயலாளர் எம்.சுந்தர் ராஜன் உட்பட நெல்லை, தூத்துக்குடி,தென்காசி,நாகர்கோயில் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்