ரவுடி கௌரி சங்கர் வெட்டி கொலை: டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை விசாரணை

0
211

திருச்சி மாவட்டத்தில் பிரபல ரவுடி கௌரி சங்கரை 7 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அவர்களை பிடிக்க டிஎஸ்பி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் நரியன் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் கௌரி சங்கர் (35). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன. பிரபல ரவுடி குணா சுந்தரபாண்டியின் நெருங்கிய நண்பர் ஆவார். கௌரிசங்கர் மண்ணச்சநல்லூர் அருகே வெங்கங்குடி பகுதியில் உள்ள இவருக்கு சொந்தமான தேங்காய் நார் உரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மாலை ஆறு மணி அளவில் சமயபுரம் புதுத்தெருவைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல், கௌரி சங்கரை தொடர்புகொண்டு பிறந்தநாள் விழா ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.

பிறந்த நாள் விழாவை கார்த்தி, சித்தார்த்தன் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் தேங்காய்நார் தொழிற்சாலைக்கு சென்று கௌரிசங்கருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு ஆசீர்வாதம் வாங்குவது போல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கௌரிசங்கரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பின்னர், வைத்திருந்த பூ மாலையை அவர் மீது போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து, மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்தில் கௌரி சங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலை தொடர்பாக சமயபுரம் கார்த்தி, கிளியநல்லூர் சித்தார்த்தன், மகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் உள்ளிட்டோரை பிடித்து மண்ணச்சநல்லூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.மேலும், பிரபல ரவுடி குணா, சுந்தரபாண்டி அவர்களின் கூட்டாளி பிரவீன், நேற்று கொலை செய்யப்பட்டு இறந்த நாள். அதே நாளில் அவருடைய நண்பர் கௌரிசங்கரை கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் காவல் துனை கண்காணிப்பாளர் செந்தில்குமார், மண்ணச்சநல்லூர் ஆய்வாளர் ரமேஷ் நேரில் சென்று விசாரித்து வருகின்றனர்.இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கொலை தொடர்பாக 7 பேரை சந்தேகத்திற்கிடமாக விசாரணை செய்து வருகிறோம். மேலும் கொலையாளிகளை பிடிப்பதற்காக ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் சோமரசம்பேட்டை, மண்ணச்சநல்லூர், சமயபுரம் ஆகிய மூன்று காவல் ஆய்வாளர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறோம்” என கூறினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்