தூத்துக்குடியில் ரூபாய் 20 கோடி மதிப்பிலான போதைப் பொருள் சிக்கியது.

0
212

தூத்துக்குடியில் இருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலிசார் பறிமுதல் செய்துள்ளனர். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஏழு பேர் கொண்ட கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர் தூத்துக்குடி கியூ பிரிவு தனிப்படை போலீசார்.தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நாட்டுப் படகு ஒன்று சுற்றித் திரிந்தது.

ரோந்து பணிக்காக அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த க்யூ பிரிவு தனிப்படை போலீசாரைக் கண்டதும் அப்படகு அதிவேகமாக தப்பிச் செல்ல முயற்சித்தது. விடாமல் துரத்திச் சென்ற போலிசார் அப்படகை சுற்றிவளைத்தனர். தப்பிச் செல்ல வேறு வழியின்றி போலீசாரிடம் மாட்டிக் கொண்டது அந்த ஏழு பேர் கொண்ட கும்பல். அவர்களை கைது செய்த போலிசார் படகில் அவர்கள் இலங்கைக்குக் கடத்த முயன்ற 20 கோடி ரூபாய் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருள் கடத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய நாட்டுப் படகையும் போலிசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டோரின் விவரங்களைக் கேட்டு கைதானவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்