ஈரோடு மாணவி பட்டப்படிப்பிற்கு ரூ.3 கோடி உதவித் தொகை

0
416

ஈரோடு மாணவி ஒருவர் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ரூ.3 கோடி உதவித் தொகை பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் சுவேகா. இவர் டெக்ஸ்டெரிட்டி குளோபல் அமைப்பின் மூலம் தலைமை மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயிற்சி பெற்று வந்துள்ளார்.

தொடர்ந்துஇந்த அமைப்பின் மூலம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலை கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பபை படிக்க ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார். இது குறித்து அவரது தந்தை சாமிநாதன் கூறுகையில் ஸ்வேகா 14 வயது சிறுமியாக இருந்த போதே டெக்ஸ்டெரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டார் என கூறினார்.

கல்வி உதவித்தொகை பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த சுவேகா சாமிநாதன்,குடும்பத்தினர், டெக்ஸ்டெரிட்டி குளோபல் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் ஷரத் சாகர் ஆகியோருக்கு நன்றி என தெரிவித்தார். உலகின் முதல் 10 பல்கலைகழகங்களில் ஒன்றான சிகாகோ பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை பெற்றுள்ள சுவேகா சாமிநாதன் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்