“கார்கிவ்” நகரில் ரஷ்யா “ஏவுகணைத் தாக்குதல்”

0
247
????????????????????????????????????

உக்ரைனின் கிவ் நகருக்கு அடுத்து இரண்டாவது மிகப்பெரிய நகரமான “கார்கிவ்” நகரில் மக்கள் வாழக் கூடிய பகுதிகளில் ரஷ்யப் படைகள் குண்டு வீசி தற்போது தாக்குதல் நடத்தியிருக்கிறன. ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் கட்டடத்தில் தற்போது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அது தொடர்பாக வீடியோ ஒன்றையும் உக்ரைன் அரசு வெளியிட்டுள்ளது. உள்நாட்டு நேரப்படி இன்று காலை 8 மணியளவில் இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கார்கிவ் நகரில் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்யா நடத்தியுள்ள இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களைத் தாக்க மாட்டோம் என்றும், உக்ரைன் மக்களின் உள்கட்டமைப்பை சேதப்படுத்த மாட்டோம் எனவும் ரஷ்யா ஏற்கனவே உறுதியளித்தையடுத்து இவ்வாறான தாக்குதல்களை நிகழ்த்தியிருப்பது கடும் கண்டனங்களுக்கு உரியது என்றும், ரஷ்யா சர்வதேச போர் விதிகளை மீறி செயல்படுவதாகவும், உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்