2 ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா அழைப்பு

0
181

முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கோமல் நகரில் நடந்தது. அதில் எந்த நிபந்தனையும் இல்லாமல் ரஷ்யா போரினை நிறுத்திக்கொள்ளவேண்டும், தனது படைகள் முழுவதையும் அரசு வாங்கிக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டது.

ஆனால் ரஷ்யா எந்த ஒரு நிபந்தனையும் வைக்கவில்லை. இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்த பின் மீண்டும் ரஷ்யா தொடர்ந்து கீவ் கரைநகர் நகரை தாக்கிக் கொண்டே இருந்தது. கீவ் நகரில் மாநகராட்சி கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்தது. தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் மூலம் தாக்கிக் கொண்டிருந்த நிலையில் கீவ் நகரில் இருந்து மக்கள் வெளியேறிக் கொண்டே இருந்தார்கள். சாலை மார்க்கமாக பொதுமக்கள் கீவ் நகரைவிட்டு போலந்து மற்றும் ருமேனியா வழியாக அகதியாக சென்றுகொண்டிருந்தார்கள. இந்நிலையில் ரஷ்யா இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு உடனே அழைத்துள்ளது. முதலாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் ரஸ்யா தனது அணு ஆயுத படையினை அதாவது அணு ஆயுதத்தின் முப்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா பெல்ஜியம் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐநாவும் ரஷ்யாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ,வந்த நிலையில் ரஷ்யா மீண்டும் போரை தொடர்ந்து வந்தது .இந்நிலையில் இன்று உக்ரைனை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

பெ. சூர்யா, நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்