உக்ரைனில் உள்ள இரு பகுதிகளைத் தனி நாடுகளாக அறிவித்துள்ளது ரஷ்யா…

0
161

ரஷ்யா,கடந்த சில தினங்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையில் ஆயுதங்களையும் ,பீரங்கிகளையும் ,ராணுவ வீரர்களையும் குவித்து அதன் மூலம் உக்ரைன் மீது போர் தொடுக்க முயற்சித்த செய்திகள் யாவும் உலகம் அறிந்ததே. ரஷ்யாவின் இந்த போக்கைக் கண்டித்து உலக நாடுகள் பலவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்தன. நேரடியாக அமெரிக்காவும் ,ஜெர்மனியும் உக்ரைனுக்கு ஆதரவாக அந்நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகளை எதிர்த்து ஆயுதங்களையும், பீரங்கிகளையும் உக்கரைனில் களம் இறக்கின. இதற்கிடையே படைகளை விலக்கிக் கொள்வதாக ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அவரது அறிவிப்பிற்கு பிறகும் படைகள் விலக்கிக் கொள்ளப்படாதது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ரஷ்ய அரசு உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள “டொனெட்க்ஸ் மற்றும் லுஹான்ஸ்க்”ஆகிய பகுதிகளை தனி நாடுகளாக அறிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டொனெட்க்ஸ் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் வாழும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அண்மையில் உக்ரைன் அரசு தங்களைத் தாக்கியதாகக் கூறி ரஷ்ய அரசிடம் தஞ்சம் அடைந்திருந்தனர். ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் அரசுக்கும் கடந்த 8 ஆண்டுகளாக மோதல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைக் காரணமாக வைத்து கொண்டு ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் வாழும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்ய அரசு அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் “மின்ஸ்க்” ஒப்பந்தம் முடிவுக்கு வருவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த தன்னிச்சையான முடிவுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. மின்ஸ்க் ஒப்பந்தத்தை மீறுவதாக ரஷ்யா மீது உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்