தீ பற்றிய அணுஉலை உக்ரைனில் தொடர் குண்டு வீச்சில் ரஷ்யா

0
120

என்ஹோல்டர் நகரில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அரச படைகளின் தாக்குதலில் இரண்டாவது வாரமாக நீடித்து வருவதால் முக்கிய நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இந்த நிலையில் என்ஹோல்டர் நகரில் உள்ள சஹாரிஸிய அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அணு மின்நிலையத்தில் தீ பற்றி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அணுமின் நிலையத்தை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா, ஷெர்பினூல் அணு உலை வெடித்தபோது ஏற்பட்ட சேதத்தைவிட பத்து மடங்கு பெரும் சேதம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளது. ரஷ்யா தீயை அணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்