உக்ரைனில் ஆன்டனாவ் விமான ஆலை மீது ரஷ்யா பீரங்கி தாக்குதல்

0
144


கீயவ்வின் வடக்கில் புறநகர் பகுதிகளில் ரஷ்ய படைகள் நடத்திவரும் பீரங்கி தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த தாக்குதலில் தீப்பிடித்தது ஆன்டனாவ் விமான நிலையம் அல்ல, ஆன்டனாவ் விமான ஆலை என, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆன்டனாவ் விமான ஆலை, கீயவ்வில் இருந்து 10 கி.மீ தொலைவில் ஸ்வியடோஷின் விமான தளத்தில் அமைந்துள்ளது.இந்த விமான ஆலையிலிருந்து கரும்புகை வெளியேறுவது போன்ற சரிபார்க்கப்படாத காணொளிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. குண்டுவெடிப்பு நடந்த பகுதியில் அவசர சேவை பிரிவினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருவதாக, அந்நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிக்கியுள்ள மக்களை மீட்க யுக்ரேன் முயற்சி
தலைநகர் கீயவுக்கு அருகேயுள்ள பகுதிகள் மற்றும் கிழக்கில் உள்ள லூஹான்ஸ்க் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 10 “மனிதநேய வழித்தடங்கள்” மூலம் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்ற முயற்சித்து வருவதாக, துணை பிரதமர் ஐரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்ட காணொலியில், “பெர்டியன்ஸ்கில் (தென் கிழக்கு யுக்ரேன்) இருந்து (துறைமுக நகரமான மேரியோபோல்) உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்லும் மனிதநேய வழித்தடத்தின் இயக்கத்தின் தடைகளை உடைக்க மீண்டும் ஒருமுறை முயற்சிப்போம்” என தெரிவித்துள்ளார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்