ரஷ்யா,இணைய வழியில் தாக்குதல் நடத்தும் -“அதி உயர் எச்சரிக்கை” விடுத்துள்ளது அமெரிக்கா

0
167

உக்ரைன் மீது போர்த் தொடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் உட்பட பல்வேறு வகைகளில் நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் இணைய வழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என அஞ்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிஉயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் மோதல்கள் அதிகரிக்கும் போது இரு நாடுகளுக்கும் இடையே சைபர் தாக்குதலுக்கான அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது என “நியூயோர்க் நகர காவல் துணை ஆணையாளர் ஜான் மில்லர்” குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் போது அந்நாட்டின் சைபர் தாக்குதல்களையும் நாம் எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால்தான் “உயர் எச்சரிக்கையில் இருந்து அதிஉயர் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளதாக ஜான் மில்லர் கூறியுள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்