ரஷ்யாவிற்குள் நுழைய அமெரிக்க அதிபருக்குத் தடை – ரஷ்யா உத்தரவு

0
142

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைனில் தொடுத்துவரும் ராணுவத் தாக்குதலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவு செய்து வரும் அமெரிக்கா அரசானது ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் மீது பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Joe Biden-Vladimir Putin summit Geneva: U.S., Russia mutual concerns
FILE PICTURE

போர் குறித்து ரஷ்யாவை கடுமையாக விமர்சித்து வந்த அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிற்குள் அமெரிக்க அதிபர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் என பல்வேறு முக்கிய அமெரிக்க தலைவர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய ரஷ்ய அரசு தடை விதித்துள்ளது. எனினும் அமெரிக்க அரசுடனான அதிகாரப்பூர்வ தொடர்பு தொடர்ந்து நீடிக்கும் எனவும் ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்