“பிரதமர் மோடி” தொகுதியில் வாக்கு எந்திரங்கள் திருட்டு – “அகிலேஷ் யாதவ்” குற்றச்சாட்டு.

0
110

பிரதமர் மோடியின் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் மின்னணு வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்ததாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையாது நாளை நடைபெறவுள்ள சூழ்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பில் உள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதாக அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்..இது தொடர்பான வீடியோவையும் சமாஜ்வாடி கட்சியினர் வெளியிட்டனர். இது குறித்து முறையான விசாரணை நடத்தி தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக பின்தங்கியுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்த தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending news: Akhilesh Yadav EVM: SP Chief Akhilesh Yadav alleges EVM theft,  know what is the truth - Hindustan News Hub
FILE PIC

எனவே வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்கவும், வாக்குப் பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அவை வைக்கப்பட்டுள்ள கட்டிடங்களைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என சமாஜ்வாடி கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலத் தேர்தல் அதிகாரி அகிலேஷின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.நாளை வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படவிருக்கும் அரசு அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை பயிற்சியளிப்பதற்காக போலி வாக்கு எந்திரங்களை அருகில் உள்ள கல்லூரிக்கு எடுத்துச் சென்றதாகத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்