தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என்றும் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கலாம் எனவும் இந்தி நடிகை கங்கனா ரனாவத் பேட்டி அளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கேஜிஎப் 2 படத்தின் வெற்றி விழாவில் பேசிய கன்னட நடிகர் சுதீப் குமார் “ஹிந்தி தேசிய மொழி இல்லை” என கூறினார்.
அதற்கு பதிலளித்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன் “ஹிந்தி தான் நமக்கு தாய்மொழி அது தான் என்றும் தேசிய மொழி” என தனது ட்விட்டர் பக்கத்தில் சுதீப் குமாருக்கு பதில் கூறினார். மேலும் ஹிந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னட படங்களை ஏன் இந்தியில் டப் செய்ய வேண்டும் எனவும் நான் நடிகர் சுதீப் குமாருக்கு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்தி நடிகை கங்கனா ரனாவத்திடம் இந்த சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், அஜய் தேவ்கன் கூறியது சரிதான் என்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்திதான் தேசிய மொழி என்றும் பதிலளித்தார்.

மேலும் தமிழ், கனடா, குஜராத்தி, இந்தி உள்ளிட்ட மொழிகளில் சமஸ்கிருதத்திலிருந்து உருவானவை என்பதால் இந்திக்கு பதிலாக சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதே எனது கருத்து என்றும் அவர் தெரிவித்தார். இந்தி தேசிய மொழியா என்ற சர்ச்சை அடங்குவதற்குள் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்கலாம் என கங்கனா ரனாவத் கூறியிருப்பது மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அதுமட்டுமன்றி தமிழ் உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை என அவர் கூறியிருப்பது பெரும் நகைச்சுவைக்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழ்,
நெல்லை.