பள்ளிகள் திறப்பு: பழைய பஸ்பாஸ் காட்டி இலவசமாக பயணிக்கலாம்

0
153

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ்பாஸ் காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சிமுறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல், 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகளை திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பழைய பஸ்பாஸ் காட்டி இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பழைய பஸ்பாஸ் மற்றும் பள்ளி அடையாளஅட்டையை காண்பித்து பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் எனவும் போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்