சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மனு.

0
102

2017 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும் சுற்றுச்சூழல் மற்றும் பறவைகள் விலங்குகள் போனறவற்றின் வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் இதற்கெல்லாம் தடையாக இருக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுவதுமாக அகற்ற ஒரு வாரத்தில் திட்ட அறிக்கையை தயார் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திட்ட அறிக்கை தாக்கல் செய்ய ஆறு மாத காலம் அவகாசம் கேட்ட தமிழக அரசு தற்போது நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை அளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்ட அந்த மனுவில் “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின்” கீழ் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நிதி ஒதுக்க மத்திய அரசு மறுத்து விட்டதாகவும் தமிழக அரசே அதற்கான நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தது. இந்த வழக்கில் ஆஜரான வனத்துறையினர் சீமைக்கருவேல மரங்களால் காட்டு வளம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறினர். சீமைக் கருவேல மரங்கள் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு எறிபொருளாக பயன்படுவதால் இதில் தொழிற்துறையினர் ஆதிக்கம் செலுத்துவார்கள் எனவும் கூறினர். இதற்கெல்லாம் அடிபணியக் கூடாது எனவும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை வரும் மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழ், நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்