பெரு நாட்டில் ஒரே மாதத்தில் 5 டன்னுக்கும் மேலான போதை பொருட்கள் பறிமுதல்

0
47

பெரு நாட்டில் கடந்த மாதம் 25-ஆம் தேதி முதல் இதுவரை வெவ்வேறு இடங்களில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 5 டன்னுக்கும் மேலான போதை பொருட்களை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். கடத்தல்காரர்களிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க வைத்திருந்த ரசாயனங்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், படகுகள், ஆயுதங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேலான போதை பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் 900-க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதுடன் சுமார் 25 போதை பொருள் மாஃபியா கும்பல்களை செயலிழக்கச் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்