நெல்லையில் காவலர்களுக்கு சித்த மருத்துவமுகாம் !

0
165

நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சித்த மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்தார் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் உத்தரவின் பேரில், நெல்லை சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் Dr.திருத்தணி, Dr.கோமளவல்லி, Dr.ஜஸ்டிஸ் ஆண்டனி ,Dr.சுபாஸ் சந்திரன், Dr.உமா கல்யாணி ,Dr.வனமாமலை மற்றும் சித்த மருத்துவ குழுவினர்கள், நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடக்கின்றது.

மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு நெல்லை மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் T.P.சுரேஷ்குமார், சித்த மருத்துவத்தின் பலன்களையும் அடுத்துவரக்கூடிய கொரோனா வைரஸ் (மூன்றாவது அலை) தாக்கினால் அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது பற்றியும் காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

மேலும் இரத்தகொதிப்பு பரிசோதனை, மற்றும் இரத்தமாதிரிகள், எடுக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. உடன் ஆயுதப்படை காவல் உதவி ஆணையாளர் முத்தரசு ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் 150 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்