சிறுநீர் எரிச்சலுக்கு ஓரிதழ் தாமரை

0
156

மருந்து 1;

அரை கிலோ அளவு எடுத்து வந்து சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து பத்திரப்படுத்தவும் இதில் 10 கிராம் அளவு எடுத்து பசு வெண்ணை அல்லது நெய்யில் குழப்பி சாப்பிடவும் ஒரே நாளில் 3 வேளை மருந்தில் குணமாகிவிடும் உணவில் காரம் நீக்கவும்.

மருந்து 2 ;


நெருஞ்சிமுள் 15 கிராம் எடுத்து கால் லிட்டர் நீரில் ஊறவைத்து இருத்தி சர்க்கரை கூட்டி பருக எரிச்சல் நீங்கும்.

மருந்து 3;

விளாம் பிசின் 35 கிராம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் பருகி வந்தால் சிறுநீர் எரிச்சல் உடனடியாக சரியாகும்.

மருந்து 4;

வெண்டைக்காய் விதையை பார்லி கஞ்சி போல வைத்து மூன்று நாள் ஆறு வேளை பருக சிறுநீர் எரிச்சல் முற்றிலும் நீங்கும்.

மருந்து 5 ;

தண்ணீர் விட்டான் கிழங்கின் மேல் தோலை நீக்கி விட்டு இடித்து சாறு எடுங்கள் இந்த சாற்றுடன் (அதாவது 1/8 லிட்டர் சாறு ) 1/8 லிட்டர் பசும்பால் சேர்த்து அடுப்பில் காய்ச்சி சரிபாதி அளவு சுண்டியதும் இறக்கி கற்கண்டு பொடி சேர்த்து பருகவும் 3 நாள் 6 வேளை பருக சிறுநீர் எரிச்சல் நீங்கி விடும்.

பெ.சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்