பாம்பு தீண்டிய பாம்பு மனிதர் உடல்நிலையில் முன்னேற்றம்

0
155

கேரளாவைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ் இவர் பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர். அந்த பகுதியில் வீட்டிலோ அல்லது தோட்டத்திலோ பாம்பு நுழைந்து விட்டால் உடனே பொதுமக்கள் இவருக்கு தகவல் கொடுப்பார்கள். விரைந்து வரும் வாவா சுரேஷ் பாம்பினை பையிலோ அல்லது டப்பாவில் பிடித்து வனப்பகுதிக்குள் சென்று விட்டுவிடுவார்.

எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் அது என்ன வகை பாம்பாக இருந்தாலும் சாதுரியமாக அவற்றைப் படித்து பாம்பின் உயிருக்கு எந்த ஒரு சேதமும் வராமல் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் அவற்றினை அப்பகுதியிலிருந்து வனப்பகுதிக்கு அப்புறப்படுத்தி கேரளா முழுவதிலும் பிரபலமாகி வந்தார். எவ்வளவு பெரிய விஷப்பாம்புகள் ஆக இருந்தாலும் அவற்றினை சாதுர்யமாக கையாண்டு கவனமுடன் தனது கையால் பிடித்து அவர் கொண்டு வரும் பைகளில் போட்டுக் கொண்டு செல்வார். இந்நிலையில் கடந்த திங்களன்று ஒரு வீட்டிற்குள் 7 அடி நீளம் கொண்ட ராஜநாகம் பாம்பு நுளைந்தது. உடனடியாக வா வா சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் அங்கு விரைந்து வந்தார். சுரேஷ் அந்த பாம்பினைப் பிடித்து வெளியே கொண்டுவந்து அவற்றினை தான் கொண்டுவந்திருந்த சாக்குப்பைக்குள் எடுத்து அவற்றினை உள்ளே விட முனைந்தார். அந்தவேளையில் 7 அடி நீள ராஜ ராஜநாகம் எதிர்பாராதவிதமாக வாவா சுரேஷ்-ன் கால் பகுதியில் வேகமாக கடித்தபடி தொங்கியது.

வா வா சுரேஷ் பாம்பினை தனது காலில் இருந்து வேகமாக விடுவித்து பின் பாம்பு கடித்த இடத்தை அழுத்திப் பிடித்து ரத்தத்தை வெளியேற்றினார். உடனே அவர் அந்த இடத்தை இருத்தி கட்டிவிட்டு பின்பு பாம்பை ஒரு டின்னில் பிடித்து அடைத்து விட்டு.

சுற்றியிருந்தவர்களிடம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கோரினார்.கோட்டையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. செவ்வாய் அதிகாலை அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. மருந்துகள் செயல்பட தொடங்கி விட்டதாகவும் உடல் உறுப்புகள் சீராக இதயம் மற்றும் நுரையீரல் நல்ல நிலையில் இயங்குவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்கு சென்று வா வா சுரேஷ் கண்டு நலம் விசாரித்து அமைச்சர் வாசு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
நான் அவரை கேட்டபொழுது அவர் தலையாட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலை இரண்டரை மணி முதல் அவரது இதயத் துடிப்பு சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பாம்பை பிடிக்க முயற்சித்தபோது அவருடைய தொடையில் அது தீண்டியதே எதிர்பாராதது வருத்தமளிக்கிறது. இருந்தாலும் தீவிர சிகிச்சைக்குப்பின் வா வா சுரேஷ் விரைவில் குணமாகி மீண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

இதுவரை இவரை நான்கு முறை பாம்பு தீண்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பிழைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது கடைசியாக 2020 ஆம் ஆண்டு பாம்பு தீண்டி இவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மீண்டு வந்தார் என்பதும் கூடுதல் தகவல். கேரளாவின் பாம்பு மனிதர் என்று அழைக்கப்படும் வாவா சுரேஷ் மீண்டு வரவேண்டும் என்று கேரளாவின் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெ . சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்